கீழ்படியாத மருமகளின் காதையும், மூக்கையும் அறுத்து கொடுமைப்படுத்திய குடும்பம்

ஆப்கானிஸ்தானில் ஆயிஷா முகமது ஷாயி(வயது 18) என்ற பெண் கணவனுக்கு கீழ்படியாததால், அவளது காதையும், மூக்கையும் அறுத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதன் பின் இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை மலை அடிவாரத்தில் தூக்கி எறிந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து சுயநினைவு வந்ததும், அந்த பெண் தவழ்ந்து கொண்டே தனது தாத்தா வீட்டிற்கு சென்றாள். உடனே அவளது தந்தை, ஆயிஷாவை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

அமெரிக்காவில் அங்கிருந்த தொண்டு நிறுவனம் ஒன்று உதவியது. செயற்கை மூக்கு வைத்து எழுதவும், படிக்கவும் கற்றுத்தந்தது. இந்நிலையில் அந்த பெண், மன வேதனையின் காரணமாக தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்கிறாள்.

தனக்கு ஆதரவாக பல நண்பர்களை அவள் தேடுவதாகவும், அதனால் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதாகவும் தொண்டு நிறுவனத்தின் தலைவி எஸ்தர் ஹைனேமன் தெரிவித்தார்.

தற்போது அந்த பெண் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டில் வசிக்கிறார், அவர்களுடன் பழகுவதால் நல்ல மனநிலையுடன் இருப்பதாக தொண்டு நிறுவனத்தின் தலைவி மேலும் தெரிவித்தார்.